அலுவலகத்தில் புகுந்து விறபனையாளரை கைவிலங்கிட்ட காவலர் சிறைபிடிப்பு
திருக்கோவிலூரை அடுத்த நரிஎந்தல் கிராமத்தை சேர்ந்த ராமர் மகன் ராஜேந்திரன். இவர் கீழதாழனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க அலுவலகத்தில் விற்பனையாளராக பணியாற்றுகிறார். இவர்


திருக்கோவிலூரை அடுத்த நரிஎந்தல் கிராமத்தை சேர்ந்த ராமர் மகன் ராஜேந்திரன். இவர் கீழதாழனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க அலுவலகத்தில் விற்பனையாளராக பணியாற்றுகிறார். இவர் சொரயபட்டி கிராமத்தி சேர்ந்த முனியன் மகன் ராமசாமியிடம் மகனுக்கு போலீஸ் வேலை வாங்கி தருவதாக காவல்துறை துணை இயக்குனர் டி.கே. ராஜேந்திரன் பெயரை பயன்படுத்தி ரூ.55 ஆயிரம் மோசடி செய்ததாக தெரிய வருகிறது.இதையடுத்து ராமசாமி மாவட்ட குற்றப்பிரிவில் சென்ற ஜூலை 29 தேதி புகார் செய்தார். அந்த புகாரின்பேரில் தொடக்க வங்கிக்கு வந்த் காவலர் குடிபோதையில் அலுவலகத்தில் அத்துமீறி புகுந்து ராஜேந்திரனை கை விலங்கிட்டுள்ளார்.
இதையடுத்து அலுவலர்கள்,பொதுமக்கள் அனைவரும் காவலரிடம் கைது செய்ய காரணம் கேட்டுள்ளனர்.மேலும் கைது செய்வதற்கு உரிய ஆவணங்கள் அவரிடம் எதுவுமில்லாததால் காவலரை சிறைபிடித்து திருக்கோவிலூர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து அங்கு வந்த திருகோவிலூர் போலீஸார் விசாரித்ததில் ராஜேந்திரன் ரூ. 55 ஆயிரம் மோசடி செய்துள்ளதாகவும்,இதனை விசாரிக்க காவல்கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து கண்ணன் இங்கு வந்துள்ளதாகவும்.எனவே ராஜேந்திரன் விசாரணைக்கு வர வேண்டும் என கூறிச் சென்றார். இதனால் கூட்டுறவு சங்க அலுவலகத்தில் பரபரப்பு காணப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...